ஓரடி நூலில்,
ஈரடிச் செய்யுளியற்றி,
முப்பால் விளக்கி,
நான்வேதத்தை மிஞ்சியது,
சான்றோன் போற்றும் எம்குறள்..!!
திராவிடம் முழுவதும் காவியம் படைக்க
தென்னகம் முழுவதும் பேசி மகிழ்ந்திட
புலவர்கள் அனைவரும் பாடி இசைத்திட
பாமரர் யாவரும் கேட்டு ரசித்திட
அழகிய எழுத்து வடிவமும் பெற்று
இனிய இன் ஓசைகள் பெற்றாய்..!
இவ்வுலகினில் தோன்றிய முதல்மொழி நீயே
பற்பல மொழிகளுக்குத் தலைமையும் நீயே
அறிவியல் யுகத்தில் தெளிவியல் பெற்றாய்
உன்னைப் புகழ்ந்திட சொற்களும் கொடுத்தாய்
பலதுறைகள் கொடுத்த செம்மொழி நீயே
நான் போற்றி வணங்கிடும் தமிழ்மொழியே..!!
வார்த்தைகள் தேடும் சிறு கவிஞன் நான்,
கவிதைகள் தரும் பெருங்களஞ்சியம் நீ.!
Hey Google, define love..!
வழி மறந்து விழித்திடும் பேதை நான்,
ஒளி கொடுத்து உதவிடும் கருடன் நீ..!!
Hey Google, guide me to the nearest Temple..!
முத்தங்கள் பேசுமிடத்தில்
வார்த்தைகளுக்கு வாய்ப்பேது..!!
சோர்ந்துதான போனேன்
செத்தா போனேன்..!!
பயிரெல்லாம் நஞ்சுபோச்சு
உழுதமாடும் மாஞ்சுபோச்சு
ஒட்டி வச்ச செங்கச்சுவரும்
ஒன்னொன்னா சரிஞ்சிருச்சு
பொத்திவளர்த்த நாலுதென்ன
தெசைக்கொன்னா விழுந்துருச்சு
பட்டிகாத்த செவலநாய
பட்டியோட காணலயே..!
வயலிருக்கு., தெம்பிருக்கு.,
சோர்ந்துதான போனேன்
செத்தா போனேன்..!!
அப்பன் அவன் முகங்காட்டி
அமுதமதை உணவாக்கி
பலையகஞ்சி புடிச்சுருக்குனு
சுடுசோறு உனக்கூட்டி
முத்தங்கள் வாரி இறைத்து
புத்தகங்கள் சொல்லித் தாரா
பாசமதை உன்னில் விதைத்து
நன்மையே சொல்லி வளர்த்தவள்.!
சுகங்கள் பல காணிணும்
உன் மடியில் சிறு தூக்கம்
என்னென்று சொல்வேன் அம்மா
இதை உணரா மடையர்களை..!
மழைச்சாரலில் தேநீரும்
அனல்காற்றில் பழச்சாறும்
அதிகாலைப் பனித்துளியும்
மாலைநேர மழைத்துளியும்
நடுநிசி வெண்ணிலவும்
சன்னலோர மெல்லிசையும்
அன்னையின் அன்பும்
தந்தையின் வளர்ப்பும்
மழலையின் சிரிப்பும்
குயிலின் கீதமும்
காதலும் கலவியும்
எதுகையும் மோனையும்
என்னில் அவளும்
அவளில் நானும்
உன் கன்னக் குழியில் விழுந்து உயிர் மாய்க்க எண்ணியவனை
காந்தக் கருவிழியால் காதல் கைதியாக்கியது ஏனோ?
Note : நா யார் கன்னத்துலயும் குதிக்கல,
யாரும் என்ன arrest um பன்னல.
படித்து அறிவுற பல்லாயிரம் வழி இருக்க
உன் இதழ் என்னும் இருவரிக் கவியிலல்லவா ஞானம் பெற்றேன்..!!
அவ வெள்ளிக் கண்ணு வெளிச்சத்துல
வெண்ணிலவும் வெட்கிப் போகும்,
அவ தங்க நிற அழகுலதான் அந்தியும் ஆழியில் அமிழ்ந்து போகும்,
அவ பாதம் பட்டு பழகிப்போக
தரிசு நிலமும் தளைச்சுப் போகும்,
சீமச் சிறுக்கி சிரிச்சுத் தொலைச்சா
செதஞ்சு போகும் கல்லு நெஞ்சும்..!
திருவிழாக்களின் வருகையை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது வீடுகளில் வீசும் பலகாரங்களின் கமகமக்கும் வாசனை..!!
தீர்ந்த சொற்கள்
திரிந்த கருக்கள்
மொனித்த மொழிகள்
மரணித்த விழிகள்
தருவித்த வலிகள்
சேர்ந்த வடுக்கள்
மறைந்த நிகழ்கள்
பார்த்தது நீ
பற்றியது நான்
எரிந்தது நான்
குளிர்ந்தது நீ
விட்டம் பாத்த தொட்டிலில
வீழ் வீழ்னு கத்தினப்போ
சிலு சிலுனு சிரிப்புச் சத்தம்
பக்கத்துத் தொட்டிலில.!
தத்தித் தத்தி நடந்தப்போ
கூடக் கூட வந்தவளே
திக்கித் திக்கிப் பேசினப்போ
கொஞ்சிக் கொஞ்சிப் பாத்தவளே.!
மாம மகள்னு புரியுரப்போ
மச்சான்னு கூப்பிட்டவ
வாலுத்தனம் பன்னினப்போ
போடானு திட்டிப்புட்ட..!
அரும்புமீச முறுக்கிவிட்டு
புருவமொன்ன உயர்த்திக்காட்ட
நீ சிரிச்ச கள்ளச்சிரிப்பு
காலமெல்லாம் மறந்திடுமோ..!!
முதன் முதலா சேலைகட்டி
முகம் முழுசா வெட்கத்தோட
பச்சோலக் குடிலில
பேரழகிய நா பாத்தேன்.!
பதினெட்டு வயசினில
பட்டிக்காட்டு வீட்டோரம்
ஒத்தையடிப் பாதையில
நீகொடுத்த ஒத்தமுத்தம்
பங்குனி வெயிலில
பனிக்கட்டி போலாச்சே..!!
மேப்படிப்பு நாலுவருசம்
நா படிச்சுத்தா முடிக்குமுன்னே
கல்யாணக் கோலத்தில
கண்கலங்கி நின்னதேனடி..!!!
உச்சி குளிர எண்ணெய் வச்சு
நேர் கோட்டு வகுடெடுத்து
கருப்புக்கச்ச இறுக்கிக்கட்டி
ரெட்டச்சட மடிச்சுப் பின்னி,
மொழம் மொழமா மல்லிகப்பூ
நெத்தி நடுவ செந்தூரம்
கண்ணு ரெண்டுக்கும் கருங்கறை
கன்னம் ரெண்டுக்கும் செல்லக்குழி,
வகுப்புக்கே உயிர் கொடுத்தவ
வெட்கத்தோட என்னப் பாத்தா
நெஞ்க்குள்ள ரயிலு வண்டி
நெனப்பெல்லாம் அவ கருவிழி..!
தூரத்து மெல்லிசை செவி சேருது மெல்ல,
காதலே காதலே தனிப்பெரும் துணையே.,
கூட வா கூட வா போதும் போதும் ..!!
புதைந்த நினைவுகள் என் அகம்
காலச் சக்கரமாய் நின் முகம்.!
புலம்பிப் பொசுங்குது என் இதயம்
ஆறுதல் தருதே உன் உதயம்.!
கலங்கிக் குமையுது என் விழி
அள்ளி அணைக்குது உன் ஒளி.!
குழம்பித் தவிக்குது என் நிகழ்
மதியே என்னெதிர் நல்வழி புகல்.!
செவ்விதழ் விரித்த இளம் ரோஜாவிற்கு,
என் இதழ் பதித்து முத்தமிட,
என் கரம் கொண்டு மலர் பறித்தால்,
சருகாய்ப் பரந்தது காற்றில்...!
சிறு ரோஜாவிற்கும் என்னைப் பிடிக்கவில்லையோ...!
என் புருவம் நெரித்துத் தொடங்கும் கோபம்
அவள் உதடு குவித்த முத்தத்தில் முற்றும்..!!
கோரைக் கிழங்கு அகழ்ந்து
கோவைப் பழம் சுவைத்து
கிழுவ மரத்தில் பேர் எழுதி
குன்றிமணி பொறுக்கி விளையாடிய அந்நாட்கள் என்ன சுகம்..!
Roomஇல் ஏசியும்
Swiggyஇல் சோறும்
Netflixஇல் படமும்
Phoneஇல் பப்ஜியும் விளையாடும் இந்நாட்கள் என்ன சோகம்..!!
ஞாலம் பிளந்தாலும்
ஆழி அழிந்தாலும்
வாழி என் தமிழ் தாயே..!!
நீ நெருப்பென்று தெரிந்தும் கட்டி அணைக்கத் தோணுதடி,
என் இலவம்பஞ்சு மனசுதான் கொழுந்து விட்டு எரியுதடி..!
உன் முத்த மழை கொட்டி என் சித்தம் குளிரச் செய்யடி,
உன் மௌனப் போரை முடித்து என் பித்தம் தெளிய வைய்யடி..!!
சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளில் பிம்பமாய் அவள் முகம்.,
செங்குருதி குளித்து பொக்கிசமானது என் மடமை..!!
ஆரஞ்சுத் தோட்டத்தில
ஆஞ்சாறு பழம்பறிச்சு
ஊட்டிவிடவா பெண்ணே ஊட்டிவிடவா.,
நீ பதினாறும் பெற்றுவாழ
பதினெட்டாம் படிக்கருப்ப
வேண்டிக்கொள்ளவா நா வேண்டிக்கொள்ளவா.,
நீ மொறச்சா மூனுமொழம்
நீ சிரிச்சா செங்கமலம்
பூச்சூடவா பெண்ணே பூச்சூடவா.,
வார்த்தைகள கோர்த்துப்புட்ட
கவிதையாத்தா மாத்திப்புட்ட
அரங்கேற்றவா உன்கிட்ட அரங்கேற்றவா.,
எந்தாரமா ஆகிடத்தா
உங்கூடத்தா சேர்ந்திடத்தா
தாலிகட்டவா உனக்கு தாலிகட்டவா..!!
எழுதுகோல் முத்தமிட்டுப் பிறந்த கவியோ,
நுனிவிரல் மீட்டப் பிறந்த மெல்லிசையோ.!!
தூரிகை கண்ட கனவோ,
மின்னும் படிகத் துகளோ..!!
உருகும் பனியோ,
எரியும் நெருப்போ..!!
அகிலோ,
முகிலோ..!!
யார் நீ..?
வெள்ளிபோல் வெளுத்து சோர்ந்திருந்த வேம்பு,
தப்பேதும் செய்யாமல் தலைகுனிந்த தென்னை,
வற்றாக் குளத்திலும் பற்றாக் குடிநீர்..!!
தீராத்தாகத்தில் தவித்தது தன்குழந்தை,
தீர்த்து வைக்க வேண்டி
தீர்த்தம் ஊற்றி வேண்டினான்..!!
கனல் காற்று வீசி
கண்ணிரண்டும் கலங்க,
தூரத்து குளம் கண்டு
பக்கத்தில் தான்சென்று,
கானல் எனப் பட்டுணர்ந்து
காய்ந்தான் கருவாடாய்..!!
மும்மாரி பொய்த்து
கல்மாரியும் காணாது,
முப்போகம் விழைந்த நிலம்
சுள்ளி முழைத்துத் தரிசானது..!!
தாகமய்யா தாகம்..!
அசையாதே முகிலே அழகொழிக்காதே
துயிலாதே அகிலே துணையிலக்காதே
ஓயாதே காற்றே ஒலிஒடுக்காதே
கலையாதே பொழுதே களிப்படக்காதே.!
நின்னொளி படர்ந்தே திசைகளும் குளிருதே
நின்முகம் கண்டே தசைகளும் சிலிர்க்குதே
நின்சுகம் அடையவே ஆசையும் பெருகுதே.!
என்துணை அறிவேன் உன்துணை கொள்வேன்
என்நிலை அறியாது உன்நிலை தேய்வதோ?
உன்னழகு பாடா கவிஞனும் உண்டோ.?
கதைகள் பேச வேணுமடி கண்ணம்மா உன் காதோடு
காவியம் படைக்க வேணுமடி கண்ணம்மா உன் விழியோடு.
தூறும் மழைத்துளியின் துள்ளலிசை நீயடி
வெட்டும் மின்னலின் வீரியம் நீயடி
கனத்த கார்மேகக் கருவிழி உனதடி
தவழும் தென்றலின் தனித்துவம் உனதடி
கோதி விளையாட வேணுமடி கண்ணம்மா உன் குழலோடு
சொர்க்கம் அடைய வேணுமடி கண்ணம்மா உன் இதழோடு..!
கலைந்து சரியும் கூந்தலதை ஒதுக்கி விட வேணுமடி
குலைந்து ஓடும் வெட்கமதில் நனைந்து தீர ஆசையடி.!
தீப்பிடிக்கும் மேனியதை அணைத்து வைக்கப் போராடி
கண்ணும் கூட கவர்ச்சியாகி நினைவிழந்து போறேனடி.!
இரவு நேர யுத்தங்களில் வெற்றி தோல்வி இல்லையடி
காலைப் பொழுது புலருகையில் புணர்ச்சி இன்பம் வெல்லுமடி..!
கரிக்கோலாய் தேயவும் தவமிருப்பேன்,
என் அழகி யவளைக் கவிதையாய்ப் புணைந்திட..!
காரிகையின் விரல்கள் தொட்ட தூரிகையின் விளையாட்டோ இக்கார் முகில்கள்..!!?
உன் தூரிகை இதழால்
காதல் மை தொட்டு
என் மீது ஓவியங்கள் தீட்டிடு..!!
எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
வள்ளுவர் கூற்றாம் கூற்று.
ஈரடிக் குறள்படித்து
சிற்றுள்ளம் உறுதிபெற்று
என் தேவதையவளிடம்
என் தேவையினைக் கூறிட
கடவுளிடம் கருணை பெற்று
கடலாய்க் கடமையிருந்தும்
கன்னியவள் முகம்காண
கண்ணியமாய் சென்றேன்..!!
அவள் இரு கருவிழி
ஒருமுறை ஓரமாய்க்
கண்டதும் நானிங்கு
எங்குறுதியின் வேகம்
உயர்வது கண்டுணர்ந்து
முகமுழுதும் முத்துக்களாய்
உவர்ப்புத்துளிகள் வடிய,
திமிரெடுத்த சின்னப்பய்யன்
மண்திங்கக் கண்ட தாய்
கைய்யும் களவுமாய் பிடிச்சதுபோல்
செய்வதறியாது நின்றேன்..!!
அய்யோ, பொய்யானதே வள்ளுவன் கூற்று..!!
சீமையோட்டுச் சந்துவழி
வெண்ணிலவப் பார்த்தபடி
சல்லிமண்ணுச் செவுத்தோரம்
அரைத்தூக்கம் தான்தூங்கி,
செந்நெற்கதிர்மேல் செங்கதிர்பட்டு
கதிர்நுனிப் பனித்துளி
பளிச்சினு மின்னயில
வேம்படிக் கருப்பனுக்கு
விதவிதமா படையலிட்டு
அறுவடையத் தொடங்கியாச்சு.!
அடிச்சநெல்ல புடிச்சவண்டில
சந்தைக்குத்தா போறமனுசா
ஓடெல்லாம் ஒடஞ்சிருக்கு
கையோட வாங்கிவாய்யா..!
ஓடுவழி மழைவந்தா
ஒன்டிகலாம் செவுத்தோரம்
அடைமழைக்கு மாசமிருக்கு
பேரம்பொறந்து வருசமாச்சு
வெள்ளிகருத்திரும் தங்கத்துல
அரைக்காசேனும் வாங்கணுங்கெளவி..!
ஏங்கிச் சாகாத மனமே..,
பூங்கோதையவள் பூமுகம் கான
இமைக்கா விழி கேட்டு
ஏங்கிச் சாகாத மனமே..!!
ஒழிவதே வாழ்வெனில்
ஒளிர்ந்தே வாழ்..!!
இமைப்பொழுதே அவள்முகம்
விழித்திரையில் பதிந்தாலும்
சித்தன்னவாசற் சித்திரமாய்
அழியாவரம் பெற்றதே..!
சத்தியங்கள் மட்டும் விதைகளாய்ப் புதைக்கப்பட்டிருந்தால்
அடர்வனமொன்றில் ஆனந்த தாண்டவம் அல்லவா ஆடியிருப்பேன்.
கேவலம் அவள் சொல்லினை வேலி போட்டா பாதுகாத்திருப்பேன்..!?
Pink colour u உதட்டழகி 💋
Black and white u கண்ணழகி 👁
Ponytail u குழலழகி 👱🏼♀
Dimple face u சிரிப்பழகி 😊
மொத்தத்துல பேரழகி 👸🏼
எம் மனசுக்குள்ள சூராவளி..! 🌪
அவ கண்ணழக எழுதிட 👁️ 👁️
ஒத்த வரி தேடுறேன் 📝
சொற்களஞ்சிம் புரட்டிப் புரட்டிப் 📔
பித்துப் புடுச்சு அலையுறேன்..! 🤕
வெட்கத்துக்கு இலக்கணம் கேட்டவ,
மொத முறையா சேலை கட்டி என்ன பாத்து வெட்கப்பட்டப்போ,
அவ நெத்தியில ஒரு முத்தம் கொடுத்து,
நீ தான்டி வெட்கத்துக்கு இலக்கணமேனு சொன்னப்போ தெரியல,
அது தான் எங்க காதலுக்கு தொடக்கமா இருக்குமுனு..!!
பூக்களில் தெரிவதில்லை விதைகளின் வீரியம்..!!
உமையாள் விழியால் மனதாள் அழகால் எனையாள் அழகாள் அன்பால் அகிலாள் விண்ணாள் சொல்லால் பொருளால் சொர்க்கமாள்..!
மறுத்துப் பின் அணைத்துப் பதிக்கும் முத்தங்களில்தான் எத்துணை இன்பம்..!
கரித்துக் கொட்டிய கார்மழைக் காற்றும்
கவிதைகள் கதைக்குது கண்மணியே,
கார்முகில் ஓடிவரக் கண்ட மியிலென
ஆடிய நின் நடனங் கண்டு..!!